விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.
அதில் பாக்கியா வீட்டுக்கு வந்த கோபி ஈஸ்வரியிடம் "மயூ வயசுக்கு வந்திட்டா அம்மா, நீங்களும் அப்பாவும் வந்திட்டுப் போனீங்க என்றால் நல்லா இரும்மா" எனக் கூறுகின்றார். அதற்கு ஈஸ்வரி "எந்தத் தைரியத்தில் எங்களை அந்த வீட்டுக்கு கூப்பிடுறாய்டா" எனத் திட்டித் தீர்க்கின்றார். இதனைக் கேட்டதும் கோபி கோபத்தில் கிளம்பிச் செல்கின்றார்.
பின்னர் பாக்கியா "மயூக்காக நாங்க இதை செய்யணும் அத்தை" என் ஈஸ்வரியிடம் கூறுகின்றார். ஈஸ்வரியும் ஒருவழியாக அதற்கு சம்மதிக்கின்றார்.
இதனையடுத்து ஈஸ்வரியும், கணவனுடன் ராதிகா வீட்டிற்கு போகின்றார். அங்கு தாத்தாவையும் பாட்டியையும் கண்ட மயூ ரொம்பவும் சந்தோஷப் படுகின்றார். பின்னர் பாக்கியா வராததை பார்த்த மயூ "ஆண்டி வந்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்" எனக் கூறி பீல் பண்ணுகின்றார். இதைக் கேட்டதும் கோபி முகம் சுளிக்கின்றார்.
இதனையடுத்து பாக்கியாவிற்கு போன் பண்ணிய மயூ ஏன் வீட்டிற்கு வரல எனக் கேட்கின்றார். மேலும் நீங்க கொடுத்தனுப்பிய லட்டு நன்றாக இருப்பதாகவும் கூறுகின்றார். அதற்கு பாக்கியாவும் நீ ரொம்ப நல்லா, சந்தோசமாக இருக்கணும் எனக் கூறி மயூவை ஆசீர்வதிக்கின்றார்.
இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.
Listen News!