• Sep 20 2024

நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸாகும் பாபா திரைப்படம்…குஷியில் ரஜினி ரசிகர்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


அதுமட்டுமல்லாமல் இவர் பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

மேலும் இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். 


இவருடைய நேயர்கள் இவரைத் தலைவர் என்றும் "சூப்பர் சுடார்" என்றும் அழைக்கின்றனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பாபா படத்தை நவீன தொழில் நுட்பத்துடன் எடிட் செய்து, மீண்டும் திரைக்கு கொண்டுவர பணிகள் நடைபெற்று வருகிறது. 


அதுமட்டுமல்லாமல் பாபா படத்தின் ஒவ்வொரு காட்சியும், தற்போதைய தொழில்நுட்பத்தின்படி கலரிங் செய்யப்படும் என்றும், பாடல்கள் மற்றும் பின்னணி இசை டால்பி முறையில் சவுண்ட் மிக்ஸிங் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


விரைவில் பாபா படத்தின் மறு ரிலீஸ் தேதிகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

Advertisement

Advertisement