• Nov 17 2024

உங்கள விட பப்லு மகன் இரண்டு வயது பெரியவர் ஆச்சே- நக்கல் கேள்விக்கு இரண்டாவது மனைவி கொடுத்த பதில்

stella / 2 years ago

Advertisement

Listen News!


 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் பப்லு. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.அதனைத் தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக  இருந்தார்.

தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவருடைய மகனின் பெயர் அகத்.


இந்நிலையில் நடிகர் பப்லுவிற்கு இரண்டாவது திருமணம் ஆக இருக்கும் செய்தி தான் கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.இந்த நிலையில் இவர் தனது வருங்கால இரண்டாவது மனைவியுடன் பல பேட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.

அந்த வகையில்  பப்லுவின் வருங்கால மனைவிடம் ‘உங்களை விட பப்லுவின் மகனுக்கு வயது அதிகம். அவரை நீங்கள் எப்படி பார்த்துக்கொள்ளப் போகிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர் ‘அவருக்கு 27 என்னைவிட இரண்டு வயது மூத்தவர் ஆனாலும் அவர் குழந்தைதான்.


 அவரைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது மற்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம் நீங்கள் நீங்களாக இருங்கள் என்பதுதான். அவர் மிகவும் திறந்த மனதுடன் இருக்கிறார் அப்படித்தான் இருக்க வேண்டும். அவரை இந்த அளவிற்கு புரிந்துகொள்ள நான் அவ்வளவு நேரம் அவருடன் ஒதுக்கி இருக்கிறேன். அவரை நினைத்து நான் சந்தோஷமடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.



Advertisement

Advertisement