• Sep 20 2024

தொட்டிலில் கிடத்தி வைத்திருக்கும் குழந்தை நடிகர் விஜய்யா?- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளம் ,தனக்கென ஓர் அடையாளம் ,தனக்கென ஓர் அங்கீகாரம் ஆகியவற்றைக் கொண்டு முன்னணி நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். சினிமாவில் நுழையும் போது பல அவமானங்களை சந்தித்தாலும் தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்கின்றார்.

இவர் வெற்றிகளை அதிகம்சந்தித்ததை விட தோல்விகளுக்கு அதிகம் முகம் கொடுத்து தனது விடா முயற்சியினால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பதோடு தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாகவும் வலம் வருகின்றார்.

இவரது நடிப்பில் தற்பொழுது வாரிசு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் இவரது 66வது படம் என்பதோடு இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார். இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இதுவரை காணாத தளபதி விஜய் அவர்களுடைய குழந்தைபருவ புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அதுவும் அவரைத் தொட்டிலில் போட்ட புகைப்படங்கள் தான் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement