• Sep 20 2024

பாசில் ஜோசப்பிற்கு பெண் குழந்தை

ammu / 1 year ago

Advertisement

Listen News!

 பாசில் ஜோசப் ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகரும் ஆவார், இவர் குறிப்பாக மலையாளத் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.


மலையாள திரைப்பட சகோதரர்கள் வினீத் சீனிவாசன் , தயான் சீனிவாசன் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்து 2015ல் வெளியான குஞ்சிராமாயணம் திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார்.


மேலும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் யாவரும் அறிந்த ஒரு விடயமே. "மின்னல் முரளி" என்ற திரைப்படத்தையும் இவர்தான் இயக்கி உள்ளார்.


இவர் எலிசபெத் என்பவரை ஆகஸ்ட் 2017ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது  இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் அவருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement