• Sep 21 2024

மேடையில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயில்வான் ரங்கநாதன்...கடைசியில் இப்படி அசிங்கமாய் போய்ச்சே.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'ரேசர்' என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேடையில் வைத்து பயில்வான் ரங்கநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது பத்திரிக்கையாளராக வலம் வருகின்றார். அத்தோடு நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகளான விஷயங்கள் குறித்து பேசி வாங்கி கட்டிக்கொண்டு வருகிறார். யூடிப் சேனல்களில் வைரலாகும் இவரது வீடியோவுக்கு ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர்.

பயில்வான் ரங்கநாதன் பல்வேறு சர்ச்சைகளான விஷயங்களை தொடர்ந்து பேசி வருகிறார். அத்தோடு  பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேசுவதை இவர் நிறுத்தியபாடாக இல்லை. இவ்வாறுஇருக்கையில் 'ரேசர்' என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேடையிலே வைத்து பயில்வான் ரங்கநாதன் மொக்கை வாங்கியுள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் என்பவர் தயாரித்து இருக்கும் 'ரேசர்' படத்தை சதீஷ் என்பவர் இயக்கியுள்ளார். அத்தோடு அகில் சந்தோஷ் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.அத்தோடு இதில் கலந்துக்கொண்டு பேசினார் பயில்வான் ரங்கநாதன்.

அப்போது  திரையுலகிலுள்ள சங்கங்கள் குறித்து தொடர்ந்து பேசினார். ஸ்டண்ட் யூனியன் என்று ஒன்று இருக்கு. அவர்களது பெயரை போட்டிருக்கலாம். இங்கு ஏராளமான சங்கங்கள் இருக்கின்றனர். அந்த பெயர்கள் எலலம் நான் கேள்விப்படாத ஒன்று. சிறு பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரை இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை என கூறினார்.

மேலும் அந்த சமயத்தில் மேடையில் இருந்த சிறு பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் பயில்வான் ரங்கநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேடையில் இருந்து எழுந்து வந்து மைக்கில், எவனும் தெளிவாக இல்லை. எதுக்கு சார் சங்கம் ஆரம்பிக்கணும். எல்லாருமே இங்கு திருடன் தான் சார் என கோபமாக பேசினார். இதனால் மேடையிலே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், பயில்வான் ரங்கநாதன் சார் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான். சினிமாவில் நடிகர், ஸ்டண்ட் மாஸ்டர். உலகத்தில் உள்ள அத்தனை ஹீரோ, ஹீரோயின்களையும் கிழி கிழின்னு கிழிப்பாரு. அவருக்கே சிறு பட தயாரிப்பாளர் சங்கம் என ஒன்று இருப்பதே தெரியலன்னு சொல்றாரு. நான் என்னத்த சொல்றது என நொந்து போய் பேசிவிட்டு போய் அமர்ந்தார். மேடையிலே வைத்து பயில்வானும், அவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.


Advertisement

Advertisement