சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயிலராகவும், கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடுடன் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியாக இருக்கிறார்.
இந்த நிலையில் இப்படம் குறித்து ஒவ்வொருவரும் பல்வேறு விதமாக விமர்சனங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் பயில்வான் ரங்கநாதனும் தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த கால வாழ்க்கையை மறந்து, மனைவி, மகன், பேரனுடன் வாழ்த்து வருகிறார். அசிஸ்டன்ட் கமிஷனராக வரும் அவரது மகன் வசந்த் ரவிக்கு ஷூ பாலீஷ் போடுகிறார்.
கமிஷ்னராக இருக்கும் வசந்த் ரவியும் தனது தந்தையைப் போலவே நேர்மையானவராக இருக்கிறார். அநியாயத்திற்கு நேர்மையானவராக இருக்கும் வசந்த் ரவி, சிலை கடத்தல் வழக்கில் வில்லன் விநாயகத்தின் ஆளான சரவணனை கைது செய்கிறார். இதனால் ஆத்திரமடையும் விநாயகம் வசந்த் ரவியை கடத்தி விடுகிறார்.
மகன் காணாமல் போனது குறித்து ரஜினி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். ஆனால் வசந்த் ரவி கொலை செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. மேலும், ரஜினியின் குடும்பத்தினரையும் கொல்ல வில்லன் விநாயகம் பல திட்டங்களை தீட்டுகிறார். இதில் இருந்து குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ரஜினிகாந்த் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார், பழைய ரஜினியை பார்த்தது போல இருந்தது. நடப்பது, கத்தியால் குத்துவது, சண்டை காட்சி என அனைத்திலும் தூள் கிளப்பி இருக்கிறார். இந்த காட்சிகளில் தியேட்டரில் கைத்தட்டல் பறக்குது.
கொஞ்சம் பாட்ஷா, கொஞ்சம் விக்ரம், கொஞ்சம் தங்கப்பதக்கம் என அனைத்தையும் சேர்த்து ஜெயிலர் படத்தை எடுத்து இருக்கிறார்
இயக்குநர். ஜெயிலர் படத்தில் வரும் சில காட்சிகள் இந்த 3 படத்தையும் நியாபகப்படுத்துகிறது. அதைப்பார்க்கும் போது, நெல்சன் எப்போதுமே சுயமா சிந்திக்க மாட்டாரு என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
பேட்ட, அண்ணாத்த திரைப்படம் நன்றாக போகாததால், ரஜினி காந்த் நெல்சனை நம்பி ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார். அதை நெல்சன் பூர்த்தி செய்து இருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ரஜினிகாந்த் தான், இந்த 72 வயதிலும் சும்மா சிங்கம் மாதிரி கர்ஜித்து இருக்கிறார். இதனால், இனி யாரும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படாதீங்க. முதல் சூப்பர் ஸ்டாரும் அவர் தான் கடைசி சூப்பர் ஸ்டாரும் அவர் தான் என தனது விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!