சில கலைஞர்களை பார்த்தால் மக்கள் அவர்கள் இந்த தொலைக்காட்சி பிரபலங்கள் என சரியாக கூறி விடுவார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சிக்கு என்று சில முகங்கள் அதாவது கலைஞர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் KPY பாலா, எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் இவர் வந்துவிடுவார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை விட அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.காமெடியால் மட்டும் ஒருவரை சிரிக்க வைக்காமல், தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகள் செய்து, அவர்களை சிரிக்க வைக்கும் நல்ல மனம் கொண்டவர் பாலா.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் வென்ற குளிர் சாதனை பெட்டியை கூட, ஒரு ஆதாரவற்றோர் இல்லத்திற்கு தான் வழங்கினார். அதே போல் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.
பாலாவின் குணத்திற்குத் தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் குவிந்தவாறு இருக்கின்றது.இந்த நிலையில் பாலா தன்னுடைய பெற்றோரான ஜெகநாதன் - பூங்குழலி தம்பதிக்கு மிகவும் பிரமாண்டமாக மணி விழா செய்து அழகு பார்த்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றையும் பாலா தற்போது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!