• Nov 19 2024

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட நடிகர் பாலகிருஷ்ணா-வார்னிங் கொடுத்த சமந்தாவின் மாஜி கணவர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

டோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகரான பாலகிருஷ்ணா, இவர் சூப்பர் மேன் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து வருவதுண்டு. இவருக்கென்று தனி ரிகர் பட்டாளமும் உள்ளது. இவரது நடிப்பில் கமந்த 14ம் திகதி வீர சிம்ஹா ரெட்டி, என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க. பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹனி ரோஸ் நடித்திருந்தனர். கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.


இந்த சக்சஸ் மீட்டில், தன் தந்தை என்.டி.ராமராவின் காலத்தைச் சேர்ந்த சக நடிகர்கள் குறித்து பேசினார். அப்போது பழம்பெரும் முன்னணி நடிகர்களான அக்கினேனி நாகேஸ்வர ராவ், ரங்கா ராவ் ஆகிய இருவரையும் மரியாதை குறைவாக பாலகிருஷ்ணா பேசியதாக சொல்லப்படுகிறது. பாலய்யா மேடையில் அப்படி பேசியபோது அங்கிருந்தவர்கள் அதனை கேட்டு சிரிக்கும் வீடியோவும் வைரலானது. அதாவது, "என் தந்தை என்.டி.ஆருடன் சில சக நடிகர்கள் இருந்தனர். அந்த ரங்காராவ், அக்கினேனி, தொக்கினேனி..." என கேலி செய்யும் வகையிலும், அவமானப்படுத்தும் விதமாகவும் பேசியுள்ளார்


இதனையடுத்து தங்கள் தாத்தாவான அக்கினேனி நாகேஸ்வர ராவை அவமானப்படுத்திய பாலகிருஷ்ணாவுக்கு, நாகார்ஜூனாவின் மகன்கள், நாகசைதன்யா, அகில் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நந்தமூரி தாரக ராமா ராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்கா ராவ் இவர்கள் அனைவரும் தங்கள் படைப்பாற்றலால் பங்களித்து தெலுங்கு சினிமாவின் பெருமையாகவும் தூண்களாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

 அவர்களை அவமானப்படுத்துவது நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதற்கு சமம்" என தெரிவித்துள்ளனர். அவர்களுடன் ரசிகர்கள் பலரும் பாலய்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாலய்யாவின் தந்தை என்.டி.ஆர், அக்கினேனி நாகேஸ்வர ராவ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதுமட்டும் இல்லாம இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றில் கூட அக்கினேனி நாகேஸ்வர ராவ் உடனான நட்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் தங்களது குடும்ப நண்பர், மூத்த நடிகர் என்ற பொறுப்பில்லாமல் பாலய்யா இப்படி பேசியது அசட்டுத்தனமானது என ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். 


பல இடங்களிலும் பாலய்யா பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார் என, அவரது பழைய சர்ச்சை வீடியோக்களையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாலகிருஷ்ணா இதுவரை எந்த விளக்கமும் கொடுத்ததாக தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement