• Nov 17 2024

பாரின் சரக்கு- கலைஞர் சினிமாவில் தமிழை ஆதரித்தார்; வாரிசு ஸ்ராலின் ஆட்சியில் ஆதரவில்லையோ?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாப் பட உலகில் தமிழுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோவென்ற சந்தேகம் வந்துள்ளது. தமிழில் பெயர் வைத்தால் வரிச் சலுகை செய்வேன் என கலைஞர் ஒரு சமயம் தனது ஆட்சியில் அறிமுகம் செய்தார்.அவரது வாரிசு தமிழை அந்தளவுக்கு நேசிக்கவில்லையோ என்ற சந்தேகம் தமிழின் மீது பற்றுக் கொண்டுள்ள தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

காரணம் பாரின் சரக்கு ,கேஜிஎப், பீஸ்ட் போலப் பல தமிழ் திரைப்படங்கள் பிறமொழிப் பெயர்களில் வெளியாவது தாராளமாகி விட்டது. பாரின் சரக்கு என்ற திரைப்படத்தின் மூலமாக 300 பேர் அறிமுகமாகி உள்ளதால் இயக்குநர் விக்னேஸ்வரனின் படத்தைக் கப்பலில் வந்த பாரின் சரக்கு என ஓர் அடைமொழியிட்டுச் சினிமா உலகில் அழைக்கின்றனர். தெற்கின் தமிழகம் வடக்கின் குஜராத் மாநிலங்களுக்கிடையே நடக்கும் சம்பவங்களின் தொகுப்பைத் தான் சுவாரஸ்யமாகக் கதை சொல்லி உள்ளேன் என விக்னேஸ்வரன் கூறுகின்றார். பாரின் சரக்குப் படத்தின் பணிகள் யாவும் முடிவடைந்து இன்று 08-07-2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று படம் திரைக்கு வந்துள்ளது.

கோபிநாத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஸ்வரனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கோபிநாத்தும் விக்னேஸ்வரனும் கப்பலொன்றில் பணியாற்றிய போது நல்ல நண்பர்களானார்கள். சினிமா இயக்கும் ஆசையில் முதலில் குறும் படங்களை எடுத்தார்கள். பின்னர் தான் பாரின் சரக்கு என்ற படத்தை உருவாக்குவதற்கான கதைக் கருவை வளர்த்தார்கள்.

இப் படத்தின் ரெய்லர் வெளியாகிப் ரசிகர்களை ஈர்த்தது. கப்பலில் வரும் 500 கோடி ரூபா மதிப்புள்ள வெளிநாட்டுப் பொருள்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கரையேறுகிறது. அதனை அடையப் பலரும் திட்டங்களைப் போடுகின்றனர். அதில் கதாநாயகன் கோபிநாத்தின் குழுவும் ஒன்று. யாருடைய கைகளில் கப்பலின் பொருள்கள் அகப்படுகின்றது? என்பதை இறுதி நிமிடம் வரையில் திகிலாகப் பாரின் சரக்குக் கதை சொல்கிறது.

ரசிகர்களைக் கதிரையின் நுனியில் உட்கார வைத்துக் கதை சொல்வதில் விக்னேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளாரா ? ரசிகர்கள் விடை சொல்வார்கள்;.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement