ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.
இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது.இந்த படத்தின் போஸ்ட் பிர்ஸ் மீட்டில் இதுகுறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “ஒரு காமெடி நடிகராக இருந்து பிரதானமான நடிகராக மாறுவது சாதாரண விஷயம் அல்ல. எனவே இது சூரிக்கு கிடைத்த வெற்றி. அதுவும் வெற்றிமாறன் கொடுத்த வெற்றி.
பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் நிறைய பேர் நிறைய விதமாக பேசுவார்கள், அட்வைஸ் செய்வார்கள். நீங்கள் பார்த்து கவனமாக இருக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!