நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் லோகேஷ் அவர்களுடன் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றினார் என்பதும் தெரிந்ததே. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட்
கடந்த வருடத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. மேலும் இந்த திரைப்படம் வெளியான பொழுது வசூல் ரீதியாக மட்டும் வசூல் அதிகமாகி விட்டது என்று தகவல் வெளியாகின. இந்நிலையில் இன்றுடன் இந்த திரைப்படம் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டதாம்.
அதன்படி பார்த்தால் தமிழகத்தில் மட்டுமே ரூ.109 கோடி எனவும் தெலுங்கில் ரூ.12 கோடி,கேரளாவில் ரூ.11.30 கோடி,கர்நாடகாவில் ரூ.11 கோடி, வெளிநாட்டில் ரூ.65 கோடி மற்ற மாநிலங்களில் நான்கு கோடி என வசூல் செய்திருப்பதாக இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் கசிந்துள்ளது.
இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இது தான் என வெளியாகிய நிலையில் தற்பொழுது இந்த தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது அதில் பார்த்தால் படப்பிடிப்பு மிகவும் கஷ்டமான நிலையில் தான் இயங்கி வருவதாக கூறப்பட்டது.
இருப்பினும் எப்படியோ இந்த லியோ திரைப்படத்தை ஒரு வழியாக எடுத்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் லோகேஷ் இருக்கிறாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!