• Sep 21 2024

‘பீஸ்ட் படமே தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல என்ட்ரி கிடையாது’-அட இவரும் இந்த படத்தில் நடிச்சவராச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்ததோடு அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது.மிகவும் மோசமான கதை, மோசமான காமடி காட்சிகள் என்று படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு மாஃளை சுற்றியே இந்த படம் நடந்ததால் இந்த படத்தின் திரைக்கதையும் படு மோசமாக போனது.

பீஸ்ட் படம் வெளியான முதல் நாளே இந்த படத்தை பலரும் கேலி செய்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் கிளைமாக்சில் விஜய் Jet ஒட்டிய காட்சிகளை உண்மையான Jet வீரர்கள் காலய்த்து தள்ளியதால் இந்த படம் இந்திய அளவில் Troll படமாக அமைந்து இருந்தது.

அந்த வகையில் இப்படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் Shine Tom Chacko இந்த படத்தை கலாய்த்து உள்ளார். தமிழில் ஹரி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த வேங்கை திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் பீஸ்ட் படத்தை கேலியாக பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் பேசிய அவர், ஒரு காட்சியில் விஜய் என்னை கட்டி அழைத்து செல்வார். பொதுவாக யாரவது ஒரு வெயிட்டை தூக்கினால் கூட முகத்தில் கஷ்டம் தெரியும். ஆனால், விஜய் தன் முகத்தில் அப்படி எதையும் காட்டவில்லை. இதுக்கு விஜய் சாரை குறை சொல்ல முடியாது. படக்குழு தான் காரணம். நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஆனால், இந்த படம் குறித்த கேலிகளை பார்த்தேன் ‘

‘பீஸ்ட் படம் உங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல என்ட்ரி என்று நினைக்கிறீர்களா’ என்று கேட்க, அதற்கு பதில் அளித்த அவர் ‘பீஸ்ட் படமே தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல என்ட்ரி கிடையாது’ என்று கூறியுள்ளதாக ரசிகர்கள் சிலர் கமென்ட் செய்து வருகின்றனர். இது நாள் வரை பீஸ்ட் படத்தை மற்றவர்கள் தான் கேலி செய்து இருந்தனர். ஆனால், அந்த படத்தில் நடித்த நடிகரே இப்படி சொல்லி இருப்பது விஜய் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement