• Sep 20 2024

’இந்தியன் 2’ ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்.. பிரபல தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் ’இந்தியன்’ படத்தின் முதல் பாகம் ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

’இந்தியன் 2’ ரிலீஸ் ஆகும் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன் ’இந்தியன்’ முதல் பாகம் வெளியாக இருப்பதை அடுத்து இந்த படத்தை பார்த்துவிட்டு ’இந்தியன் 2’ படம் பார்த்தால் கோர்வையாக கதை புரியும் என்பதால் தயாரிப்பாளர் ஏ.எம், ரத்னம் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் ’இந்தியன்’ முதல் பாகத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்றும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் ஜூன் 7ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஏஎம் ரத்தினம் தயாரித்திருந்தார் என்பதும், ஷங்கர் இயக்கி இருந்தார் என்பதும்  ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார் என்பதும், கடந்த 1996ஆம் ஆண்டு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement