• Sep 20 2024

சூர்யா படத்தில் இணையும் முன்னணி மலையாள நடிகர்! அட இவரா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து முன்னணியில் இருப்பவர் தான் நடிகர் சூர்யா.

சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி இருந்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அடுத்து பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அடுத்து அவர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். அத்தோடு அது மட்டுமின்றி சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க மலையாள நடிகர் துல்கர் சல்மான் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது. அவருக்கும் ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போது சுதா கொங்கரா ஹிந்தியில் சூரரைப் போற்று படத்தை ரீமேக் செய்து வருகின்றார். அதனால் சூர்யாவுடன் அவர் இணையும் படம் எப்போது தொடங்கும் என்பதே தற்போது வரை உறுதியாகவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement