• Nov 19 2024

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே- தந்தை குறித்து சோகமான பதிவு போட்ட சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர் - நடிகைகளின் மகன் மற்றும் மகள்களே வந்த வேகத்தில் திரையுலகில் இருந்து காணாமல் போகும் நிலையில், எந்த விதமான சினிமா பின்னணியும் இன்றி, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.

தனக்கான படிகளை தானே செதுக்கி கொண்டு ஏறத்துவங்கிய சிவகார்த்திகேயனை, பின்னர் மக்களே வெற்றி நாயகன் என்கிற பட்டத்தை கொடுத்து, தற்போது டாப் நடிகர்கள் பட்டியலில் ஏற்றி அழகு பார்த்து வருகிறார்கள். 


ஆரம்பத்தில் இருந்து காமெடி கலந்த ஹீரோவாக நடித்த சிவகார்த்திகேயன், சமீப காலமாக ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.இவரது நடிப்பில் மாவீரன் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகின்றார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது தந்தையின் 70வது பிறந்தநாளான இன்று, அவர் குறித்து நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில், நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி. தாஸ் அவர்களின் மகன் சிவகார்த்திகேயன் என்று சொல்வது தான் பேரழகு மேல புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில், என்னிடம் அவரின் கதைகளை கதைத்தார். 

அந்த நபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி.தாஸ். கோயம்பத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி.தாஸ் அவர்கள் சுப்ரெண்ட்டாக பணிபுரிந்த பொழுது, சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார் என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலை செய்து, சிறைவாசத்தை அனுபவித்தார். சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை, ஆனால் விடுதலை ஆன பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது, முதுகலை பட்டம் பெற்றிதிருந்தார், அதற்கு காரணம் ஜி.தாஸ் அவர்கள். சிறைப்பறவைகளை என்றும் அடிக்க கூடாது, சிறைப்பறவைகளுக்கு நல்ல உணவும் நீரும் கொடுக்க வேண்டும், சிறைப்பறவைகளுக்கு கல்வியை புகுத்த வேண்டும், இவை அனைத்தையும் செய்தார் ஜி.தாஸ். 


எல்லா தவறுகளுக்கும் இங்கு மன்னிப்புண்டு, அந்த மன்னிப்போடும் அன்பையும், கருணையும் அள்ளி அள்ளி கொடுத்தார். ஜி.தாஸ். கர்நாடக மாநிலம் நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காக, சிறைச்சிட்டுகள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். சிறைச்சிட்டுகளின் செயலை பார்த்து அவர்களை பாராட்டி, அன்றிரவு சிறைச்சிட்டுகளுக்கு பிரியாணி உணவை கொடுத்து மகிழ்ந்தவர். 

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில், ஏதேனும் கஷ்டம், கல்விக்கு பணம் வேண்டும், மருத்துவ செலவு வந்தால், ஜி. தாஸ் அவர்கள் அந்த குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து உதவுவர். இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா. மனித மனங்களை கொண்டாடுவோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


இறுதியாக, அப்பா... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே. இன்று நான் என்னவெல்லாம் செய்கிறேனோ அதற்கு காரணம் நீங்கள் தான் அப்பா. எப்போதும் பெருமைக்குரிய மகனாக உங்களை நினைவில் வைத்திருப்பேன் என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.


Advertisement

Advertisement