• Sep 20 2024

செம மாஸாக வெளிவந்த தளபதி 66 படத்தின் first லுக் போஸ்டர்..லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். இவருடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார் ,குஷ்பு ,ஷாம் என பல நட்சத்திரப் பட்டாளங்களே இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பபாக நடந்த வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் குறித்தும் அடிக்கடி தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. மேலும் தளபதியின் பிறந்த நாள் இந்த மாதம் 22ம் திகதி வர இருப்பதால் ரசிகர்கள் பலவிதமான டிபி வெளியிட்டு வாழ்த்தி வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் First லுக் போஸ்டர், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

அதன்படி, 'வாரிசு' எனும் தலைப்புடன் தளபதி 66 படத்தின் First லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. இதோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement