• Sep 20 2024

சமந்தா மற்றும் விஜய் தேவர் கொண்டா நடித்து வரும் “குஷி”திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

அந்த வகையில் தமிழில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் யசோதா திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவர் கொண்டாவுடன் குஷி என்னும் படத்தில் நடித்து வருகின்றார். டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement