தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லனாகவும் நடித்து வருபவர் தான் விஜய் சேதுபதி.இவர் தற்பொழுது பாலிவூட் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதன்படி மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்திருக்கும் அவர் ராஜ் & டிகே இயக்கிய ஃபர்ஸி வெப் சீரிஸில் நடித்திருக்கின்றார்.மேலும் இவரது நடிப்பில் இறுதியாக ஜவான் திரைப்படம் வெளியாகியது.
இதனை அடுத்து தற்பொழுது குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.இது விஜய்சேதுபதியின் 50வது படமாகும்.இந்த நிலையில் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது. அந்தப் போஸ்டரில் கையில் கத்தியுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க அமர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அவருக்கு பின்னணியில் காவல் துறையினர் நிற்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என கணித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து சமீபத்திய படங்கள் எதுவும் ஓடவில்லை. எனவே இந்தப் படம் அந்த நிலைமையை மாற்றும் என ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்
Listen News!