• Sep 20 2024

சூப்பர் ஸ்டாருடன் சிறப்பான தருணங்கள்- திடீரென ரஜினியுடன் நிற்கும் புகைப்படத்தை ட்ரெண்டிங் ஆக்கும் லெஜண்ட் சரவணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மிகப்பெரிய பிசினஸ் மேக்னட்டான லெஜண்ட் சரவணன் தனது துணிக்கடை விளம்பரங்களில் நடிகைகள் தமன்னா, ஹன்சிகா உள்ளிட்டோருடன் ஆடிப் பாடி நடித்து வந்த நிலையில்,திடீரென சினிமாவில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.

அந்த வகையில் அண்மையில் இவரது நடிப்பில் தி லெஜண்ட் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.இது இவருடைய அறிமுகப்படமாக இருந்தாலும் பலருடைய பாராட்டுக்களையும் இப்படம் பெற்றது. இப்படத்தை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தனர்.

ரஜினிகாந்தின் சிவாஜி படத்தை போல தி லெஜண்ட் திரைப்படத்திலும் நல்ல ஒரு மெசேஜ் மக்களுக்காக சொல்லப்பட்டு இருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டு பிடித்து இலவசமாக கொடுக்கும் மருத்துவராக நடித்திருந்தார் லெஜண்ட் சரவணன்.

நடிகர் ரஜினிகாந்த் உடன் லெஜண்ட் சரவணன் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகிறார். Moments with Superstar என கேப்ஷன் கொடுத்து ரஜினிக்கும் டேக் செய்துள்ளார் தி லெஜண்ட் சரவணன். லெஜண்ட் ட்வீட் செய்த போட்டோக்களை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் தி லெஜண்ட் படத்தோடு நடிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்து நடிக்கவும் திட்டங்கள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement