• Sep 20 2024

மிகச்சிறந்த படம்- மாதவனின் ‘ராக்கெட்டரி’ திரைப்படத்தைப் பார்த்து பாராட்டிய பிரபலங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரான்ஸில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா மிகப் பிரமாண்டமாக ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. இவ் விழாவிற்கு இந்திய திரைப்பிரபலங்கள் ஏ.ஆர். ரகுமான், நவாஸுதீன் சித்திக், மாதவன், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ படம் திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்தை ஏஆர் ரகுமான், பார்த்திபன், பா ரஞ்சித் உள்பட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் பார்த்தனர்.

இந்த படத்தை பார்த்த ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் மிகச்சிறந்த படம் என்றும் மாதவன் மேல் தனது மரியாதை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் .

அதேபோல் பார்த்திபன் இந்த படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் நடிகர் மாதவன் நடித்து இயக்கி தயாரித்த ‘ராக்கெட்டரி’ படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

https://www.youtube.com/embed/IpBdOP32lrk

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement