• Sep 20 2024

"எப்போதும் சிறந்த தமிழ் தொடர்" - சுழல் வெப் சீரியலுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்த உதயநிதி ஸ்டாலின்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம் வேதா. இப்படத்தினை இயக்கியவர்கள் தான் புஷ்கர் - காயத்ரி தம்பதியினர், இஇப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர்க் திரைக்கதை எழுதி வெளியாகிய வெப் தொடர் தான் சுழல்.

வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடரை பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். 8 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடரில் முதல் 4 எபிசோடை பிரம்மாவும், அடுத்த 4 எபிசோடை அனுசரணும் இயக்கி உள்ளார்.

இந்த தொடரில் முக்கிய வேடங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் , ஸ்ரீயா ரெட்டி, பார்த்திபன் மற்றும் கதிர் ஆகியோர் நடித்திருந்தனர்.ஜூன் 17, வெள்ளிக்கிழமை OTT இல் வெளியான இத் தொடருக்கு பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் இது குறித்து நடிகர் உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் "எப்போதும் சிறந்த தமிழ் தொடர்" என்றும் தெரிவித்துள்ளதோடு இத் தொடரில் நடித்தவர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement