• Sep 21 2024

பெஃஸ்ட் தளபதி விஜய் அதுக்கு பிறகு தான் கைதி 2- முக்கிய அப்டேட்டைக் கொடுத்த கார்த்தி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாநாகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தையும் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தையும் இயக்கியிருந்தார். இப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் விக்ரம். இப்படமானது கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீசானது.நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்.

கைதி படத்தில் பிஜோய் கதாபாத்திரம் (நரேன்) , அடைக்கலம் கதாபாத்திரம் (ஹரிஷ் உத்தமன்) , அன்பு கதாபாத்திரம் (அர்ஜூன் தாஸ்) ஆகிய கதாபாத்திரங்கள் விக்ரம் படத்திலும் இடம் பெற்றுள்ளன.

லாரி உரிமையாளர் தீனாவும், கைதி படத்தில் கார்த்தியின் குழந்தையாக வரும் பெண் குழந்தையும் விக்ரம் படத்தில் நடித்துள்ளனர்.கைதி படத்தின் அடுத்தக்கட்டமாக விக்ரம் படம் அமைந்துள்ளது. மேலும் விக்ரம் படம், கைதி-2 & விக்ரம் -3 படங்களுக்கும் லீட் உடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் விருமன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காரத்தியிடம் 'கைதி 2 எப்போ?' என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த கார்த்தி "லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போகும் நடிகர் விஜய்யின் படம் முடிந்ததும் கைதி 2 படத்தின் வேலைகள் ஆரம்பமாகும்" என கூறியுள்ளார்.இந்த கைதி 2 படத்தின் அப்டேட்டால் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement