• Sep 20 2024

அழகையும் தாண்டி உங்களோட அந்த பார்வை இருக்கே- மாமன்னன் படத்தில் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்ட ரவீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

 ஒரு 'கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ரவீனா. இதை தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடிக்காமல், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


 அந்த வகையில் லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவும், யோகி பாபுவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.இதைத்தொடர்ந்து இவர் மாமன்னன் படத்தில் பகத் பாஸிலுக்கு ஜோடியாக நடித்திருந்தது அனைவரும் அறிந்தது தான்.  


மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு என பல மொழி நடிகைகளுக்கும் குரல் கொடுத்து உள்ளார். அதேபோல் ரவீனா தாய் ஸ்ரீஜா அவர்களும் அதேபோல் உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதும் முக்கியமாகும்.


இந்த நிலையில் ரவீனா மாமன்னன் படத்தில் பகத் பாசிலுடன் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் மாமன்னன் படத்தில் பணிபுரிந்த போது எடுத்த புகைப்படங்கள் எனப் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement