பிரபல மலையாள நடிகரான பகத் பாசில், சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் தற்போது ரஜினியின் 170வது படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை பார்த்தே இந்த படத்தில் அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர் ஞானவேல் என்ற கருத்து ரசிகளிடத்தே எழுந்திருக்கின்றது.
அந்த வகையில், இப்படத்தில் நடிப்பதற்கு பகத் பாசிலுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
Listen News!