• Sep 19 2024

அவங்களே கொன்னுட்டு, பாடிய தேட பணம் கேட்குறாங்க: பாக்யராஜின் சர்ச்சை பேச்சு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

 பிரபல இயக்குனர் பாக்யராஜ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் ஆற்றில் குளிக்க வரும் நீச்சல் தெரியாத சிலரை, நீரில் மூழ்கி மூச்சடக்கும் திறமை கொண்ட சிலர் கொன்று விட்டு அதன் பிறகு அவர்களே பிணத்தை எடுக்க பணம் பேரம் பேசுவார்கள் என்று தெரிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை அறியும் குழு அது பொய்யான வதந்தி என்று விளக்கம் அளித்துள்ளது

இயக்குனர் பாக்யராஜ் தனது சமூக வலைதளத்தில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில் தமிழகத்தில் நடக்கும் சில விஷயங்களை பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவத்தை ஒட்டி அவர் பேசிய போது  கோவை மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள அம்பராம்பாளையம் என்ற ஆற்றில் குளிக்க செல்பவர்களை சிலர் வேண்டுமென்றே தண்ணீரில் மூழ்கிக் கொண்டு பாறை இடுக்கில் பிணத்தை மறைத்து வைத்துவிட்டு அதன் பின் பிணத்தை மூழ்கி எடுத்து தர உறவினர்களிடம் பேரம் பேசுவார்கள் என்றும் இது ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றும் பேசியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள  தமிழக  உண்மை அறியும் குழு ’பாக்யராஜ் கூறுவது  அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு என்றும் அந்த பகுதியில் இதுவரை  இது போன்ற எந்த நிகழ்வும் இல்லை என்றும் கடந்த  2022 - 2023 ஆம் ஆண்டுகளில் அந்த பகுதியில் அவர் சொல்வது போல் ஆற்றில் மூழ்கி ஒரு உயிரிழப்புகளை ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவது குற்றம் என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பாக்யராஜ் இதற்கு வருத்தம் தெரிவிப்பாரா? அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை எல்லாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





Advertisement

Advertisement