விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. இந்த சீரியலே விஜய் டிவி விருது விழாவில் பெஸ்ட் சீரியல் என்ற விருதையும் பெற்றது.
இது தவிர பாக்கியாவாக நடிக்கும் சுசித்ராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுக்கு சிறந்த நடிகை என்ற விருதும் செல்வியாக நடிக்கும் கம்பன் மீனாவுக்கு சிறந்த காமெடி நடிகைக்கான விருதும் கிடைத்தது.
இந்த விருது விழாவில் கோபியாக நடிக்கும் சதிஷ் கலந்துகொள்ளவே இல்லை. அவருக்கு எந்த விருதும் கொடுக்கப்படவில்லை.தான் சீரியலில் இருந்து விலகுவதாக விருது விழா முடிந்த மறுநாளே அறிவித்தார் சதீஷ். இருப்பினும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சீரியலில் பாக்கியாவுக்கும் பழனிக்கும் திருமணம் நடக்கப் போகின்றது என்ற எண்ணத்தில் கோபி இருக்கின்றார்.இதனால் பழனி பாக்கியாவைப் பெண் பார்க்க வருவதாக கனவு காண்கின்றார். இது குறித்த ப்ரோமோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இப்படியான நிலையில் பழனி பாக்கியாவை பெண் பார்க்க வந்த சீனை வைத்து செந்துாரப்பூவே சீரியலின் ப்ரோமோ போட்டோவையும் ஒன்றாக இணைந்து இது பாக்கியலட்சுமி சீரியல் இல்லை,செந்துாரப்பூவே சீசன் 2 எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!