• Sep 20 2024

பாரதி கண்ணம்மா 2ஆவது சீசனில் ஹீரோவாக களமிறங்கவுள்ள சன் டிவி நாயகன்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற ஒரு சீரியல் என்றால் அது 'பாரதி கண்ணம்மா' சீரியல் தான். இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து இயக்குநர் பல டுவிஸ்ட்டுகளுடன் தான் கதைக்களத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார். இதனால் தான் இந்த சீரியலுக்கு ஆரம்பத்திலிருந்து, முடிவடையும் வரை ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.


மேலும் அருண் மற்றும் ரோஷினி நாயகன்-நாயகியாக நடிக்க தொடங்கப்பட்ட இந்தத் தொடருக்கு அப்போதிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மிகவும் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலானது தற்போது முடிவிற்கு வந்துள்ளது.


இந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா தொடரின் 2-ஆம் பாகம் பற்றிய பேச்சுக்கள் இன்ஸ்டாவில் பரவலாக தொடங்கியுள்ளது. அந்தவகையில் தற்போது இந்த 2-ஆவது சீசனில் சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலான ரோஜா தொடரில் நாயகனாக நடித்த சிப்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement