• Sep 21 2024

கோலாகலமாக நடந்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகரின் திருமணம்... மணப் பெண் இவங்க தானா... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல்களிலேயே அதிக முறை டிரெண்டிங்கில் இடம்பெற்ற ஒரு சீரியல் என்றால் அது 'பாரதி கண்ணம்மா' சீரியல் தன. இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த சீரியலாகவும் இது அமைந்திருந்தது. 


இந்த தொடரில் அகில் கதாப்பாத்திரத்தில் முதலில் நடித்துக்கொண்டிருந்தவர் நடிகர் அகிலன். பின்னர் சீரியலை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் நடிகர் அகிலன் தற்போது தனது காதலியான அக்‌ஷயா முரளிதரனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் இத்தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement