• Nov 17 2024

பாரதியால் அழுது புலம்பும் வெண்பா.. கண்ணம்மாவுக்கு உருவான புதிய எதிரி –இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சியில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் மிகவும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இவ்வாறு இருக்கையில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒரே ஒரு திருப்பு முனையை வைத்து பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். ஒரே ஒரு DNA டெஸ்ட் மொத்த ஜோலியும் முடிந்துவிடும் ஆனால் அதை மட்டும் செய்ய மறுக்கிறார் இயக்குநர் என புலம்பி தவிக்கிறார்கள் ரசிகர்கள்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

கண்ணம்மா சக்தி என ஒரு குழந்தை அட்மிட் ஆனாளே அவ எங்கே இருக்கிறாள் என்னாச்சு என கேட்க நர்ஸ் ஒருவர் அந்த பொண்ணு ரொம்ப துருதுருன்னு இருக்கா.. ஆனா பாவம் இதயத்தில் பிரச்சனை ஒரு வாரத்தில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து அதனால் நேற்று டாக்டர்கள் மீட்டிங் போட்டு எல்லா ஹாஸ்பிட்டலுக்கு டோனர் கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளனர். பாவம் அந்த குழந்தைக்கு அற்ப ஆயுசு என சொல்ல கண்ணம்மா எதுக்கு அப்படி சொல்றீங்க அது தான் சரி பண்ணிடலாம் என்று சொல்லி இருக்காங்களே அவங்க பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க என கூற நர்ஸ் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

பின்னர் கண்ணம்மா அந்த குழந்தையை பார்த்து பேசி குழந்தையோடு விளையாடுகிறார். அதன் பின்னர் மருத்துவமனையில் ஒருவர் புட் ரிவியூ செய்ய இதை பார்த்த பாரதி என்ன ஹாஸ்பிடல்ல இல்ல வேற ஏதாவது தான் என ஒரு டாக்டரிடம் கூறுகிறார். அந்த டாக்டர் இதையெல்லாம் பார்க்க கடுப்பா இருக்கு எல்லாம் புதுசா போட்டோ அட்மின் பண்ற வேலை. ஒரு மண்ணும் தெரியாது அவளை அட்மினாக போட்டு நம்ம உயிரை வாங்குறாங்க என கூறுகிறார். இனிமே இந்த மாதிரி சூட்டிங்க் ஏதாவது பண்ண கேமராவை சீஸ் பண்ணுங்க, யாராச்சும் கேட்டா பாரதி தான் இப்படி சொன்னார் என சொல்லுங்க விக்ரம் அங்கிள் கிட்ட நான் பேசிக்கிறேன் என தெரிவிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் கண்ணம்மாவை அழைத்து பாரதி இதெல்லாம் உன் வேலையா என சத்தம் போடுகிறார். கண்ணம்மா அவரு நேரா விக்ரம் சார் கிட்ட பர்மிஷன் வாங்கி இருக்கிறார் என சொல்ல முயற்சி செய்தும் அதை சொல்ல விடாமல் திட்டி தீர்த்து விட்டு சென்று விடுகிறார் பாரதி.

மேலும் இந்தப் பக்கம் சௌந்தர்யா, வேணு மற்றும் விக்ரம் ஆகியோர் பாரதி கண்ணம்மா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் கண்ணம்மா மீதான கண்ணோட்டம் பாரதிக்கு மாறும் எல்லாமே நல்லதாக நடக்கும் என தெரிவிக்கிறார்.

இந்த பக்கம் வெண்பா அழுது புலம்பிக் கொண்டே இருக்கிறார். இவ்வளவு நாளாக முட்டாளாக இருந்து இருக்கேன் என புலம்புகிறார். என்னுடைய லவ் அன்பு எதுவுமே உனக்கு புரியலையா பாரதி என்னையே ஐ ஹேட் யூ ன்னு சொல்ல வச்சுட்ட என அழுது கொண்டிருக்க அப்போ சாந்தி என்னாச்சு என கேட்க பாரதியைப் பார்த்து கேள்வி கேட்டு விட்டு ஐ ஹேட் யூ-னு சொல்லிட்டேன் என தெரிவிக்கிறார். இதைக் கேட்ட ஷர்மிளா கைதட்டி வெரிகுட் என சொல்ல வெண்பா அதிர்ச்சியாகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement