தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் சாதனை படைக்க விரும்பிய ஹீரோக்களில் ஒருவரே பரத். இவர் ஆசைப்பட்டது போன்றே இன்று தன்னுடைய நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்து வைத்திருக்கின்றார். அதுமட்டுமன்றி நிறைய வித்தியாசமான கதையம்சத்தை கொண்ட படங்களினைத் தேர்வு செய்தும் நடித்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி 2003-ஆம் ஆண்டு வெளிவந்த 'பாய்ஸ்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'செல்லமே' என்ற படத்தில் நடிகை ரீமா சென்னின் தம்பியாக நடித்திருந்தார்.
மேலும் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான 'காதல்' என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் பெரியளவில் பேசப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து 'எம் மகன், வெயில், நேபாளி, பழனி, சேவல்' என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். அதுமட்டுமன்றி இவரின் நடிப்பில் இதுவரை 49 இற்கும் அதிகமான படங்கள் வெளிவந்துள்ளன.
இவ்வாறாக பல படங்களில் பிஸியாக நடித்து வந்த பரத் திருமண பந்தத்திலும் இணைந்து கொண்டார். இவருக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் டுவின்ஸ் ஆவர். இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்றய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர்.
அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் பரத் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர்களின் புகைப்படங்களை பதிவிட்டிருக்கின்றார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்து மழையினையும் பொழிந்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- ‘புஷ்பா’ பட நாயகனுக்கு கிடைத்த புது அங்கீகாரம்… குவியும் வாழ்த்துக்கள்…!
- தளபதி விஜய்யால் வாய்ப்பை இழந்த செந்தில் கணேஷ்… ஏமாற்றி விட்டனரா படக்குழுவினர்..? வெளியான தகவல்…!
- ப்ளூ உடையணிந்து ஓவர் கவர்ச்சி காட்டும் டாப்ஸி… ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
- சிம்ரனைக் காதலித்த பிரபல நடிகர்… கடுப்பான விஜயகாந்த்… காரணம் என்ன..?
- பூஜா ஹெக்டேயின் தம்பியை பார்த்திருக்கிறீர்களா..? அட அது இவர் தானா..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!