• Sep 20 2024

பாரதி கண்ணம்மா சீரியலின் கொப்பி தான் லியோ..! இப்படியொரு அவமானம் தேவையா லோகி?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் லியோ படம் தொடர்பான பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, 'லியோ' படத்தை பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தான் லோகி காப்பி அடித்தார் என ஸ்டாண்ட் அப் காமெடியன் ஒருவர் கூறியுள்ளார்.குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகில் நடிகர் விஜய்யின் படம் என்றாலே மக்கள் மத்தியில் அதிகளவான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேவேளை தளபதியின் படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகளும் வருவதுண்டு.


அதேபோல், தற்போது வெளியான லியோ திரைப்படமும் பல்வேறு தடைகளை தாண்டி வெளியாகியுள்ள நிலையில், அதற்கு மாறுப்பட்ட விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில்,  ஸ்டாண்டப் காமெடியன் ஒருவர்  'லியோ' படம் வெளியாகிய சில நாட்களுக்குள் அதனை கன்டென்ட் ஆக மாற்றியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், 'லியோ' திரைப்படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் இருவருமே முட்டாள்கள். ஒரே ஒரு DNAடெஸ்ட் எடுத்தால் லியோவா பார்த்திபனா யார் என்பது தெரிந்துவிடும். இந்த படத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலை பார்த்தே  லோகேஷ் எடுத்துள்ளார் என்றும் கழுவி ஊற்றி உள்ளார். 

இதேவேளை, நடிகர் விஜய்  தனது ரசிகர்களுக்கு சிறப்பான படங்களை தர தவறி வருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement