• Sep 20 2024

பாரதி கண்ணம்மா வில்லி வெண்பாவுக்கு திருமணம்? இணையத்தில் கசிந்த தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கி வருவதோடு கடந்த 2019ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகின்றது

இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் லட்சுமிக்கு அப்பா பாரதிதான் என தெரிந்த போதிலும் அது பற்றி மேலும் கதை நகரவில்லை. பாரதிக்கு டிஎன்ஏ சோதனை நடக்கும் வேலை கூட நடக்கவில்லை. இப்படி கதைக்க சம்பந்தமான எந்த விஷயமும் இல்லாமல் வேறு வேறு விஷயங்களால் கதையை ஓட்டி வருகிறார் இயக்குநர்.

இந்த சீரியலில் வில்லி வெண்பா பாரதியை தனது கணவராக பல விதங்களில் முயற்சி செய்து வருகின்றார். ஆனால் அது நடந்தபாடில்லை. பிரிந்து இருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்வதற்கான அறிகுறிகள் தான் சீரியலில் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் வில்லி வெண்பாவின் அம்மா சர்மிளா அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையை தொடங்கி இருக்கின்றார். இன்றைய எபிசோடில் ஒரு மாப்பிள்ளை குடும்பத்தினர் வெண்பாவை பெண் பார்க்க வருகின்றனர்.

மேலும் அதற்காக வெண்பா கல்யாண பெண் போல சேலைகட்டி ரெடி ஆகி வருகிறார். ஆனால் இறுதியில் அந்த மாப்பிள்ளையுடன் தனியாக அழைத்து பேசி தனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது போல பொய்யாக காட்டி அந்த மாப்பிள்ளையை ஓட வைக்கிறார்.

இப்படி வெண்பா செய்யும் வேலைகளை பார்த்தால் இறுதியில் துர்கா தான் வெண்பாவுக்கு மாப்பிள்ளையாக வருவார் என தற்போது இணையத்தில் தகவல் பரவி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement