ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்றாக இருப்பது தான் பிக்பாஸ். பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக ஆட்கள் தேர்வு ஒருபக்கம் படு ஜோராக நடைபெற்று வர, மறுபுறம் எப்படா தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே பிக்பாஸ் ப்ரோமோ ஷூட்டும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதால், அதற்கான அப்டேட்டுக்காக தான் அனைவரும் காத்திருந்தனர்.அதன் படி அண்மையில் பிக்பாஸ் சீசன் 7 னுக்கான இரண்டு ப்ரோமோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
அத்தோடு இந்த முறை இரண்டு வீடுகள் பிக்பாஸ் வீடாக இருக்கப் போகின்றது என்று கூறியதால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். அத்தோடு கமல்ஹாசனுடன் இணைந்து பெண் ஒருவரும் நிகழ்சச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இதில் விஜய் டிவி தொகுப்பாளரான மாகாபா ஆனந்த், நடிகை கிரண் எனப் பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டது. இதனை அடுத்து தற்பொழுது மௌனராகம் சீரியல் நடிகை ரவீனாவும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினியும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!