விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. இதில் அஞ்சலி என்ம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை அருள்ஜோதி ஆரோக்கியராஜ்.
அவர் முதலில் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். அதன் பின் தான் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.இந்நிலையில் நடிகை அருள்ஜோதியிடம் இன்ஸ்டாக்ராமில் ஒருவர் மிகவும் மோசமாக கமெண்ட் செய்து இருக்கிறார்.
ஆபாசமாக பேசிய அந்த நபரை அருள்ஜோதி இறுதியில் மன்னிப்பு கேட்க வைத்து இருக்கிறார். அதை ஸ்கிறீன்ஷாட் எடுத்து அவரே வெளியிட்டு இருக்கிறார். தவறாக பேசுபவர்களிடம் கடுமையாக இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இவர் இது தவிர ஷு தமிழில் ஒளிபரப்பான நினைத்தாலே இனிக்கும் சீரியலிலும் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!