• Sep 20 2024

தீவிரவாதிகளுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடிய பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர்- என்ன தான் நடக்குது இங்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. கணவனின் சந்தேகத்தால் கணவனை விட்டுப் பிரிந்து வாழும் பெண் எதிர் கொள்ளும் சவால்களை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


மேலும் எப்போது பாரதிக்கு எல்லா உண்மையும் தெரிய வரும் உண்மை தெரிய வந்தால் பாரதி என்ன செய்வார் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார். ஆனால் சீரியல் ஜவ்வாக இழுபட்டுக் கொண்டு போவது ரசிகர்களையும் கடுப்படையச் செய்துள்ளது.


மேலும் இந்த சீரியலில் பாரதி வேலை செய்யும் ஹோஸ்பிட்டலை தீவிரவாதிகள் பிடித்து வைத்து தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. பீஸ்ட் படத்தினைப் போல இது அமைந்ததால் பெரிதாக இந்த எப்பிஷோடுகள் ரசிகர்களை கவரவில்லை எனலாம்.


இந்த நிலையில் தற்பொழுது இந்த தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் சீன் எல்லாம் நிறைவுற்றதால் அவர்களுடன் சேர்ந்து சீரியல் குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அடுத்த வாரம் இந்த தீவிர வாதப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் எப்பிஷோட்டுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement