• Sep 20 2024

மகாநதி சீரியலில் களமிறங்கிய பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி- வெளியாகிய வீடியோ- அப்போ இதில் யார் தான் நிவினின் ஜோடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் மகாநதி.தந்தையை இழந்து நான்கு பெண் பிள்ளைகள் தாயுடன் தனியாக வாழும்போது என்னென்ன போராட்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சீரியலே மகாநதி.

இந்த சீரியலில் தற்பொழுது குமரன் தன்னுடைய மனைவி மற்றும் யமுனா, காவேரி நர்மதா, நிவின் எல்லோரையும் கூட்டிக் கொண்டு சென்னைக்கு ஹனிமூனுக்குச்  சென்றிருந்தார்.அங்கே நிவின் காவேரிக்கு ப்ரபோஸ் செய்ய காவேரியும் நிவினின் காதலை ஏற்றுக் கொண்டு விட்டார். இந்த விஷயம் அன்னும் கங்காவுக்கு தெரியாது.


இது ஒரு புறம் இருக்க நிவின் மீது யமுனாவும் காதல் வயப்பட்டுள்ளார். இதனால் நிவின் யாரைத் தான் திருமணம் செய்யப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இப்படியான நிலையில் இந்த சீரியலில் தற்பொழத புதிகா ஒரு நடிகை இணைந்துள்ளார். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் அக்காவாக நடித்து வருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement