• Sep 20 2024

திடீரென முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 2- என்ன காரணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக  ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. அதாவது மலையாள தொடரான கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக்காக பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடர்  ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்தது.

இந்த சீரியலின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் 2ஆவது பாகத்தையும் ஆரம்பித்து ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்தை போலவே 'பாரதி கண்ணம்மா 2' சீரியலும் ரொம்பவே விறுவிறுப்பாக சென்று நகர்ந்து வருகின்றது.


மேலும் இந்த சீரியலில் பாரதி சௌந்தர்யாவுக்கு தெரியாமல் கண்ணம்மாவைத் திருமணம் செய்து விட்டார். இதனால் சௌந்தர்யா குடும்பம் பாரதி மீது செம கோபத்தில் இருக்கின்றனர். இதனால் பாரதி அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. டிஆர்பியில் பின்னுக்கு தள்ளப்பட்டதே சீரியல் முடிவதற்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement