• Sep 20 2024

கதை சொல்லியே ஹவுஸ்மேட்ஸின் வெறுப்பை சம்பாதித்த பவா செல்லதுரை- இப்பிடி சொல்லிட்டாங்களே

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 7 ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் பவா செல்லதுரை ஹவுஸ் மேட்ஸுக்கு பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய கதையை கூறினார். கதை முடியும்வரை ஹவுஸ் மேட்ஸ் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர். 

கதை முடிந்ததும் பவா செல்லதுரையிடம் பிரதீப் ஆண்டனி கண் கலங்கியபடி நீங்கள் எனக்கு ரோல் மாடல் உங்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் எச்சில் துப்புவது போன்ற விஷயங்களை நான் ஒருமாதிரி எடுத்துக்கொள்வேன். மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று கூறினார். அதற்கு பதிலளித்த பவா செல்லதுரை, இது என் இயல்பு. அந்த கடவுளே என் எதிரில் வந்து நின்றாலும் என்னுடைய இயல்பை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று தெரிவித்தார். 


அதனையடுத்து விஷ்ணுவும் அவரிடம் ஏன் நீங்கள் மாற்றிக்கொண்டால் என்ன. வாழ்க்கை என்பது கற்றுக்கொள்ளுதல்தானே என கூற; பவா செல்லதுரையோ ஒருவரின் நியாயத்தை இன்னொருவரிடம் புகுத்தாதீர்கள்; திருடனுக்கும் நீதிபதிக்கும் ஒரே நியாயம் இருக்க முடியாது. உடனே மாற்றிக்கொள்ள முடியாது என்று முடித்தார். 

தொடர்ந்து  பவா செல்லதுரையிடம் வந்த விசித்திரா, நீங்கள் ஒரு கதை சொல்லும்போது பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. பாதியிலேயே நிப்பாட்டுவதுபோல் எனக்கு தோன்றுகிறது. உங்கள் கதையில் நிறைய நெகட்டிவ் இருப்பதுபோல் தோன்றுகிறது. கதையை கேட்டு யாரோ ஒருவர் திருந்தலாம். ஆனால் நீங்கள் சொல்வது வேறு மாதிரி அவரின் தலையில் உட்கார்ந்திட கூடாது என்று கூற; பவாவோ நான் கதை சொல்லவில்லை நான் படித்ததைத்தான் சொல்கிறேன் உங்களுக்கு ஏற்பட்ட ஃபீலிங் வேறு யாருக்காவது வந்திருக்கிறதா என்று கேளுங்கள் என சொல்ல எனக்கு வந்ததை மட்டும்தான் நான் சொல்ல முடியும் என்று பவாவிடம் கூறிக்கொண்டிருந்தார். 

அந்த சமயத்தில் வந்த ஜோவிகா இந்த கதையில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. இதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என கேட்டார். உடனே பதிலளித்த பவா செல்லதுரை, 'இந்த கதை நான் ஏன் சொன்னேன் என்றால் அவ்வளவு பெரிய புகழ் உடையவர் நேர்மையாக அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார் என்பதைத்தான். இங்கு யாரும் பெரிதாக அப்படி பதிவு செய்யவில்லை. கண்ணதாசன் மட்டும்தான் வனவாசம் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். பாலசந்திரனின் அனுபவத்தை நான் சொல்லவில்லை. அவருடைய நேர்மையைத்தான் சொன்னேன்.


ஒரு எழுத்தாளரால் யாருக்கும் கன்க்லுயூசன் தர முடியாது. நீங்கள் உங்களுக்குள் பேச வேண்டும் என சொல்ல; ஜோவிகாவோ நான் அப்படி பேசும் இயல்பு உடையவள் இல்லை என கூற; இல்லை நீங்கள் பேச வேண்டும் என பவா சொல்ல ஆரம்பிக்கும்போதே; அப்படி நான் பேசமாட்டேன். நீங்கள் சொன்னதை உங்களிடம்தான் வந்து கேட்பேன் என சொன்னார். உடனே பவா செல்லதுரை சரி என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement