சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அஜித் குமார். தனது திரைப்பயணத்தில் இதுவரை 60இற்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்துள்ள இவர் தற்போது 'AK 62' படத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்திற்கு 'விடாமுயற்சி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சினிமாவில் படு பிஸியாக இருந்து வருகின்ற அஜித் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளது. அதாவது பிரபலங்கள், அரசியல் வாதிகள், ரசிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை பாவனாவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அஜித்திற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார். இதனை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பதிவிட்டிருக்கின்றார்.
இப்பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!