• Sep 20 2024

ரோஜா சீரியலில் களமிறங்கும் பாவனி மற்றும் அமீர்- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா. அந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யனும் கதாநாயகியாக ப்ரியங்காவும் நடித்து வருகின்றனர். டி ஆர் பியிலும் இந்த சீரியலே முன்னணியில் காணப்படுகின்றது.

மேலும் இந்த சீரியல் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் இதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.இந்த சீரியலில் பல திருப்பு முனைகள் நிகழ்ந்ததை அடுத்து சுவாரஸியத்திற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது


இந்த நிலையில் இந்த சீரியல் அதன் 1000வது எப்பிஷோட்டை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் இந்த எப்பிஷோட்டிற்கு சிறப்பு விருந்தினராக அமீர் மற்றும் பாவனி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அமீர் மற்றும் பாவனி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர்கள் என்பதோடு இவர்கள் இருவரும் சின்னத்திரையில் முக்கியமான காதல் ஜோடியாக வலம் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement