• Sep 20 2024

'கமலை நீ தான் கடவுள்' என புகழ்ந்த பிக்பாஸ் அபிஷேக்- உனக்கு மரியாதையே தெரியாதா என திட்டி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலக நாயகன் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகராக விளங்குபவர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் கடந்த ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கமலுடன் இணைந்து, விஜய்சேதுபதி, பகத் பாசில், ஆகியோர் முக்கிய தோற்றத்திலும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா, காயத்ரி, மைனா நந்தினி ஆகியோரும் நடித்திருந்தனர்.தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, வட இந்தியா என எல்லா இடங்களிலும் விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது.

உலகம் முழுவதும் படம் 13 நாட்களில் ரூ. 317 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல் நான் எனது அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்திவிட்டேன். எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னால் முடிந்ததைக் கொடுப்பேன். அதன் பிறகு என்னிடம் எதுவும் இல்லை என்றால். நான் இனி கொடுக்க எதுவும் இல்லை என்று சொல்விடுவேன்,

வேறு யாரிடமிருந்தோ பெற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு உதவுவது போல் நடிக்கமாட்டேன். எனக்கு பெரிய பட்டங்கள் எதுவும் வேண்டாம். நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிஷேக் ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் கூறியதை பதிவிட்டு, "நீ தான் கடவுள்" என கூறியிருந்தார். இந்த பதிவால் கடுப்பான ரசிகர்கள் அது என்ன நீ உனக்கு மரியாதையே தெரியாதா என்றும், எப்பா என்ன உருட்டு உருட்டுற என்று கேட்டு கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement