சின்னத்திரை நடிகரும் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய போட்டியாளருமான தினேஷ் மீதும் ஏனைய சில நடிகர்கள் மீதும் டிவி நடிகர் சங்க பொதுக் குழுவில் நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தில் தற்போது தலைவராக இருக்கும் சிவனும், பொது செயலாளராக இருக்கும் போஸ் வெங்கட்டும் இருக்கும் நிலையில், அவர்கள் கடந்த காலத்தில் பதவியிலிருந்த பலபேர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியுள்ளார்கள்.
அதன்படி, நாளை மறு தினம் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற இருக்கும்போது குழுவில், நிதி மோசடி தொடர்பில் கடந்த சங்க நிர்வாகத்தில் இருந்த பல பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போதைய நிர்வாகத்தினர் வர முன், ரவிவர்மா தலைமையிலான நிர்வாகம் தான் பதவியில் காணப்பட்டனர்.
அப்போது நடிகர், நடிகைகளை மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்துச் செல்ல, கிட்டத்தட்ட 11 லட்சம் நிதி மோசடி நடந்ததாக அந்த நேரத்தில் பிரச்சினைகள் எழுந்தது.
இதைத்தொடர்ந்து சிவன் தலைமையான நிர்வாகம் பொறுப்புக்கு வந்ததும், கடந்த காலத்தில் நிதி முறைகாட்டில் ஈடுபட்ட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க முன் வந்துள்ளனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் புகழ் தினேஷ் கடந்த முறை ரவிவர்மா அணியில் இருந்துள்ளார். இப்போதும் தற்போதைய பதவியில் காணப்படுகிறார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, கடந்த முறை ரவிவர்மாவிற்கு சங்க நடவடிக்கை தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்கியதாகவும், அது தொடர்பாக நிர்வாக பதவியில் இல்லாமலே சில சங்க ஆவணங்கள் சிலவற்றை கையாண்டதாகவும் தினேஷ் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறதாம்.
மேலும் தினேஷ் மீது மட்டும் இல்லாமல், ராஜ்காந்த் உட்பட்ட சில நடிகர்கள் ரவிவர்மா அணியில் இருந்து தற்போது பதவியில் இருக்கும் அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.
இதனால் இவர்கள் பொதுக்குழுவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்ற காரணத்தால் கூட்டம் நடத்துவதற்கு முன்பே போலீஸ் பாதுகாப்பு கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!