• Sep 20 2024

ஆரம்பிக்கலாமா..? வெளியானது Bigg Boss-7 ஆரம்பமாகும் தேதி... அடடே இன்னும் கொஞ்ச நாட்கள் தானே இருக்கு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளிலும் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது.


மேலும் இம்முறை பிக்பாஸில் ஒரு வீடு அல்ல, இந்த முறை இரண்டு வீடுகள் எனவும், பிக்பாஸும் இரண்டு தான் எனவும் தகவல் வெளிவந்த நாளிலிருந்து எப்போடா இந்த சீசன் ஆரம்பமாகும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கிடக்கின்றனர்.


இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-7 நிகழ்ச்சி அக்டோபர் 1ம் தேதியே ஆரம்பமாகப் போவது உறுதியாகி விட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. அதுமட்டுமல்லாது விரைவில் அதற்கான ஷூட்டிங் இடம்பெறும் எனவும், குறிப்பாக செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

Advertisement

Advertisement