சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக கலைஞர் 100 விழா நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் வருவார்கள் என பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.
அதன்படி, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கியமாக பங்கேற்று இருந்தனர்.
இந்த நிலையில், கலைஞர் 100 விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த உரையாற்றும்போது அங்கிருந்த நாற்காலிகள் அதிகளவில் காலியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி குறித்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டேன் என ஒரு நடிகர் கலைஞரிடம் சொன்னார். அதன் பின்னர் அந்த நடிகரை தன்னுடன் அழைத்துக் கொண்டு படம் பார்க்க வரச் சொல்லும் போது காய்ச்சல் என்றார் அந்த நடிகர். வந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்திய நிலையில், அந்த நடிகர் தியேட்டருக்கு வந்த போது சூரியன் பக்கத்தில் உட்காருங்க காய்ச்சல் சரியா போய்விடும் என்றார் அவர் தான் கலைஞர் என்றும் அந்த நடிகர் வேறு யாரும் இல்லைங்க நான் தான் என ரஜினிகாந்த் பேசிய நிலையில், திமுக மேடையிலேயே அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டதை கெத்தாக சொல்றாருய்யா ரஜினிகாந்த் என அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
இதேவேளை, இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் போது அரங்கில் மொத்த சேர்களும் காலியாக இந்த முதல் விழா இதுதான் என ரசிகர்கள் கவலை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் போது அரங்கில் மொத்த சேர்களும் காலியாக இருக்கும் முதல் விழா!
பவர் ஆஃப் கருணாநிதி!🤭#சாத்தான்100 #Kalaignar100 pic.twitter.com/9gWV4PjB1U
Listen News!