• Sep 20 2024

Bigboss போட்டியாளராக களமிறங்கும் பிரபல சினிமா நடிகை..? அட இவரா..? அப்போ காதல் கலாட்டா எல்லாம் இருக்கும் போலவே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதுண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ். 


இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோவும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் கமல்ஹாசன் கடலிற்கு நடுவே வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார்.


இதனையடுத்து சீசன் 7இன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மென்மேலும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது. யார் யார் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்பதைக் காணப் பலரும் ஆவலுடன் உள்ளனர்.


இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது பிக்பாஸ் சீசன் 7இல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக நடிகை தர்ஷா குப்தாவும் கலந்து கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் பிரபல சினிமா நடிகையாக இருந்தாலும் முதலில் சீரியல் நடிகையாக தான் பிரபலம் ஆனவர். அதன் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். இதனையடுத்து சினிமா வாய்ப்பு வரவே அவர் சீரியல்களில் இருந்து விலகிவிட்டார்.


அந்தவகையில் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் அவர் நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே இவருடன் இணைந்து வேறு யார் யார் எல்லாம் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement

Advertisement