விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்ரியாலிட்டி ஷோ தான் 'பிக்பாஸ்'. இந்நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமாகி முடிவடைந்தது.
இந்த சீசனில் பங்குபற்றிய 21போட்டியாளர்களில் ஒருவராக ADK என்பவரும் கலந்து கொண்டார். இவர் பிக்பாஸ் பைனல் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முன்பாக பிக்பாஸ் வீட்டில் எலிமினேட் ஆகி இருந்தார். சிறந்த போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் வலம் வந்த ஏடிகேவின் பாடல்களுக்கு பிரத்யேக ரசிகர்களே உள்ளனர்.
அத்தோடு பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சூழ்நிலைகள் குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் ஸ்பாட்டில் நிறைய பாடல்களை அவர் பாடி உள்ளார். அதே போல, சிறப்பாகவும் ஆடி வந்த ஏடிகே, Finale வாரத்திற்கு முன் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தி இருந்தது.
இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நாள் முதல் ராப் பாடல்கள் பாடுதல், சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடல் என ரொம்பவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் இவரின் மகன் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இதற்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். இதற்கு கீழே கமெண்டுகள் வாயிலாக ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!