• Sep 20 2024

காதலி மோனிகாவை கரம் பிடித்த bigboss kavin- வெளியாகிய திருமண போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக்பாஸுக்கு முன்னர் விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வந்ததோடு சீரியல்களிலம் நடித்து வந்தார்.இருப்பினும் இவருடைய கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது பிக்பாஸ் ஷோ தான்.


லிஃப்ட் படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடித்த திரைப்படம் டாடா. எமோஷனலான காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றியும் கண்டார் கவின். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. இந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த படங்களில் டாடாவும் ஒன்று. 


இதனால் தொடர்ந்து படவாய்ப்புக்களைப் பெற்று நடித்து வருகின்றார்.இதனிடையே கடந்த மாதம் கவின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அவர் மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது. 


இந்நிலையில், இன்று கவின் - மோனிகா டேவிட் ஜோடியின் திருமணம் சென்னையில் உள்ள பார்க் ஹயாட் ஓட்டலில் வைத்து நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement