• Sep 20 2024

விஜய்டிவி பிரபலங்களைப் போல ரசிகர்களை நம்பி களத்தில் குதித்த பிக்பாஸ் அக்ஷரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரை 5 சீசன்களைக் கடந்துள்ளது. இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் அக்‌ஷரா,

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது வருணுக்கும் இவருக்கும் இருந்த நட்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக இருந்தது. ஃபிரீஸ்க் டாஸ்கின் போது, வீட்டுக்குள் வந்த வருண் அம்மாவும், அதை பெருமையுடன் இருவரிடமும் சொன்னார்.பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் இருவரும் அடிக்கடி வெளியே சந்திப்பதை, வழக்கமாக வைத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அக்‌ஷரா சில நாட்களுக்கு முன்பு முக்கியமான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.அதாவது ‘அக்‌ஷரா ரெட்டி’ என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் தொடங்க இருப்பதாக கூறினார்.

ஏற்கெனவே வெள்ளித்திரை பிரபலங்கள் தொடங்கி சின்னத்திரை பிரபலங்கள் பலரும் யூடியூப்பில் சேனல் தொடங்கி பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் அர்ச்சனா, மைனா நந்தினி, சித்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, ஹேமா ராஜ்குமார், மாகாபா, பிரியங்கா என லிஸ்ட் ரொம்ப பெருசு. இந்த வரிசையில் இப்போது அக்‌ஷராவும் இணைந்துள்ளார் என்பதும் குறப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement