விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் டைட்டில் வின்னர் ஆனது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் தற்பொழுதும் பலர் இந்த நிகழ்ச்சியை விமர்சித்து வருகின்றனர். அத்தோடு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் போட்டியாளர்கள் பலரும் வாய்ப்புக்களைப் பெற்று நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏடிகே தான் பாடிய ஊர்க்கிழவி என்னும் பாடலை இன்று 7 மணிக்கு தனது யூடியூப் சேனலான ஏடிகே ராப்பர் என்னும் தளத்தில் வெளியிடவுள்ளாராம். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவருடன் விக்ரமன் ஷிவின் ராம் ஆகியோரும் சேர்ந்து கூறியுள்ளனர். இதனால் ஏடிகேவிற்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!